Breaking

Thursday, June 27, 2019

இன்று அதிகாலை பெண் உட்பட பதின்நான்கு (14) பேர் அதிரடியாக கைது!


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சிவநகர் பகுதியில் புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு காவல் துறையினர் இன்று (27-6-19) அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தேடும் கருவி, கெமரா, மடிக்கணனி உள்ளிட்ட பெருமளவான பொருட்களைக் கைப்பற்றியதுடன், இவர்கள் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் 3  கார்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (27-6-2019) அதிகாலை புதையல் தோண்டும் முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாத்தறை, தம்புள்ள, கலேவெல, திருகோணமலை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டதுடன், குறித்த சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.