Breaking

Thursday, June 13, 2019

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி வைத்தியசாலையில்! 22 வயதுடைய இளைஞர் கைது!

பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13-6-19) காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காசல் துறை ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் இடம்பெற காதல் விவகாரமே காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.