Breaking

Tuesday, June 11, 2019

இலங்கையில் திருமணம் செய்ய மறுத்ததால் குடும்ப பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்! 65 வயது முதியவரின் வெறிச்செயல்!

இலங்கையின் சூரியவெவ - பெத்தேவெவ பிரதேசத்தில் நேற்று (10-6-2019) 28 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயொருர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய முதியவரொருவர் பல தடவைகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதற்கு குறித்த பெண் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பெண் அவரை தாக்கியுள்ளார்.

இதனால் கோபமுற்ற அந்த நபர் யுவதி வீதியில் சென்றுக் கொண்டிருந்த குறித்த பெண்னை மோட்டார் சைக்கிளிள் வந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மேலும் கொலையை செய்த நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் , காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.