Breaking

Friday, June 7, 2019

றிசாட் , அசாத் , ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 4 முறைப்பாடுகள்!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகள் 3  பேர் தலைமையில் கடந்த 4 ஆம் திகதி குறித்த குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவிற்கு கிடைக்க பெறும் முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பபடவுள்ளதாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.