Breaking

Tuesday, June 18, 2019

கடன் சுமை - மனைவியுடன் முறுகல் - தற்கொலை செய்து கொண்ட கணவன்

இலங்கையில் கடன் சுமையினால் மனைவியுடன் ஏற்பட்ட முறுகலின் பின் தூக்கிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று ஹட்டன், குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அசங்க ஜயலத் என்பவரே குடாகம பகுதியிலுள்ள தனது வீட்டில் நேற்று (17-6-19) இரவு நித்திரைக்கு சென்ற நிலையில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தனது அறையில் நித்திரைக்கு சென்ற குறித்த நபர், அதிகாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஹட்டன் மரண பரிசோகர் ஏ.ஜே. பஷிரின் மரண பரிசோதனையின் பின்னர் சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக ஹட்டன் காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல் துறை  மேற்கொண்டு வருகின்றனர்.