Breaking

Saturday, July 27, 2019

பாரவூர்தி, வீதி ஓரத்தில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் ஒருவர் பலி….

கொழும்பு – கண்டி வீதியின் பிலிமத்தலாவை – கடலாதெனிய சந்தியில் பாரவூர்தி ஒன்று மோ தியதில் பாதசாரி ஒருவர் பலியானார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த பாரவூர்தி, வீதி ஓரத்தில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிலிமத்தலாவையைச் சேர்ந்த 42 வயதுடையவரே சம்பவத்தில் பலியானார்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாரதி, கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என கடுகன்னாவை காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.