Breaking

Friday, July 26, 2019

8 மாத கர்ப்பிணியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன்!

கர்ப்பிணியான மனைவியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில், அவரது கணவரை தாம் கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்போனுக்கு பயன்படுத்தப்படும் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

8 மாத கர்ப்பிணியான 24 வயதான ஸ்ரீகாந்த் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர்களின் வீட்டில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.