Breaking

Wednesday, July 31, 2019

தாய்க்கு இருந்து வந்த தகாத உறவு... மகனின் செயலால் கூச்சலிட்ட அக்கம்பக்கத்தினர்..!


தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை வெட்டிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆரோக்கியமேரி. இவருக்கு முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், முருகன் வீட்டுக்கு வந்த போது அவரை ஆரோக்கிய மேரியின் மகன் நரேஷ், மருமகன் மரியதாஸ் அரிவாளால் வெட்டிகொலை செய்துள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். இதனால் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் விரட்டி சென்ற பொழுது கருணாகரன் என்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிய நரேஷ், கத்தியால் கழுத்தை அறுத்துகொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய மரியதாஸை போலீசார் தேடி வருகின்றனர்.