Breaking

Wednesday, July 31, 2019

யாழ். வடமராட்சியில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்! முற்றுமுழுதாக நாசமாகிய வீடொன்று!

யாழ். வடமராட்சி – உடுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்று முற்று முழுதாக எரிந்து சேதமடைந்துள்ளது.

நேற்றைய தினம் பகல் வேளையிலேயே வீட்டில் தீப்பற்றியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. தீ பரவல் அங்குள்ள பூஜை அறையிலேயே முதலில் பற்றிக் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.

இந்த தீ விபத்து தொடர்பான பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மின் ஒழுக்கின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவல் ஏற்பட்ட அந்த அறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அறையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன் 60 ஆயிரம் ரூபா பணம், 3 பவுண் நகைகள் தீயில் நாசமாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீபரவல் ஏற்பட்டதை அவதானித்ததும் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் லேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.