Breaking

Thursday, July 18, 2019

செல்பி எடுக்க முயன்று கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!


காலி ரூமஸ்சல மலை உச்சியிலிருந்து கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கற்பாறையொன்றில் சிக்கியிருந்த நிலையில் அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞரென கண்டறியப்பட்டுள்ளது.

செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற நால்வர் குறித்த மலையிலிருந்து தவறி கடலில் வீழ்ந்தனர். அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மேலும் இருவர் காணாமல்போயிருந்தனர். காணாமல்போன மற்றையவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.