Breaking

Monday, July 29, 2019

யாழில் சற்று முன்னர் கோர விபத்து…! தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்..!

யாழ் நல்லூர் செம்மணி வீதியில் சற்று முன்னர் கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . நேரெதிரில் வந்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜன நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் கனரக வாகனத்துடன் நேரெதில் வந்த ஹையஸ் வான் ஒன்று மோதியுள்ளது .

எவ்வாறெனினும், இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் எவையும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், இரு வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணம் செய்த சிலர், சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனச் சாரதிகளின் பொறுப்பற்ற அதீத வேகமும், கவனக் குறைவினாலுமே, மேற்படி விபத்து நேரிட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக, வடக்கில் தினம் தோறும் இவ்வாறான தேவையற்ற விபத்துக்கள் இடம்பெறுவது சகஜமாகிவிட்டமை வேதனைக்குரியது.