Breaking

Saturday, August 3, 2019

பிரேக் பிடிக்காததால் நேர்ந்த விபரீதம்!..மூன்று வாகனங்களுடன் மோதிய பாரவூா்தி..!

இலங்கையின் குருநாகல்-தம்புள்ளை பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று மூன்று வாகனங்களுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (03-8-19) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த நபரொருவா் சிகிச்சைகாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.

பாரவூர்தியின் தடுப்பு செயலிழந்து காணப்பட்டதே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த (CCTV) பாதுகாப்பு கெமராவில்  பதிவாகியுள்ளது.