Breaking

Friday, August 16, 2019

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலி!

இலங்கையின் தம்புள்ளை – ஹபரண பிரதான வீதி குடாமீகஸ்வேவ பிரதேசத்தில்  ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

நேற்று இரவு 10.00 மணியளவில் டிப்பர் மற்றும் வேன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் வேனின் டிரைவர் மற்றும் வேனில் பயணித்த இரண்டு பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மற்றொரு ஆணும் ஒரு பெண்ணும் பலத்த காயங்களுடன் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்டி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பலியானவர்கள் பொலன்னறுவை பிரதேசத்தினை சேர்ந்தவர்களே என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுனர் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனின் டிரைவர் மற்றும் டிப்பரின் டிரைவர் ஆகியோரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.