Breaking

Wednesday, August 14, 2019

இலங்கையில் நடந்த துயரம்! ”எனது காதலின் அளவை நாளை காண முடியும்” காதலியின் குறுந்தகவலால் காதலன் தற்கொலை!


இராணுவ தலைமையகத்தில் கடமையில் இருந்த ஒரு சிப்பாய் ஒருவர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் விவகாரம் என தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் பொலன்னறுவை – அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த இராணுவ வீரர் பல காதல் உறவுகளை பேணி வந்துள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.

இதில் ஒரு காதலி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், “எனது காதலின் அளவை நாளை காண முடியும்” என குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னரும் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 2 பேர் இவ்வாறு தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர்கள் காதல் விவகாரங்களின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது.