Breaking

Thursday, August 1, 2019

வெளிநாட்டில் இலங்கையரொருவரால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்! இருவரும் ஆபத்தான நிலையில்!

இலங்கையர் ஒருவர், இத்தாலியின் பெதுவா மாகாணத்தின் டெஹோலோ நகர் பகுதியில் மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரியவருகிறது. 46 வயதான இந்த இலங்கை நபர், 26 வயதான தனது மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகளையும், இலங்கை நபரையும் இத்தாலி பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.