Breaking

Friday, August 2, 2019

முல்லைத்தீவு மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு..! நடந்தது என்ன?


முல்லைத்தீவு றோமன் கத்தோலிக பாடசாலையொன்றில் வைத்து உயிரிழந்த இ.லிந்துசியா மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி எஸ். லெனின் குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த தரம் 7 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி கடந்த 29.07.2019 அன்று பாடசாலை சென்றுள்ளதோடு, மதியம் 12.30 மணியளவில் பாடசாலையில் வைத்து அவருக்க இழுப்பு (சுவாச நோய்) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் 2 மணியளவிலேயே குறித்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணைகளின் முடிவில் மாணவியின் சடலம் அவரது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலதிக விசாரணைகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவின் மரணத்திற்கு பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே காரணமென குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.