Breaking

Thursday, August 29, 2019

அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம்! இரு இளைஞர்கள் பலி!


கல்முனை துர்ந்தியமேடு பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்து விலகி ஒரு கல்வெட்டில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், சவாரி செய்தவரும் பலத்த காயமடைந்து கல்முனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிந்தனர்.

விபத்தில் 19 வயதுடைய உந்துருளியாளர் மற்றும் 30 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் சடலங்கள் கல்முனை மருத்துவமனையில் வைக்கப்பட்டு, கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.