Breaking

Saturday, August 3, 2019

பேருந்துடன் உந்துருளி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

இலங்கையின் பண்டாரவளை-தியதலாவ பகுதியில் உந்துருளி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் உந்துருளியில் பயணித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று (08-03-2019) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த (CCTV) பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தமை விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உதவியாக இருந்தமை குறிப்பிடதக்கது.