Breaking

Monday, August 12, 2019

கொழும்பு கொம்பனித்தெருவில் கள்ளக்காதலியுடன் சென்ற அழகு சாதன நிலைய முகாமையாளர் படுகொலை! விசாரணை தீவிரம்!


கொழும்பு கொம்பனித்தெரு - முத்தையா சாலையில் ஒரு அழகு நிலையத்தின் மேலாளரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் இந்த மாதம் 19 ஆம் தேதி வரை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை, மற்றும் ஹல்கந்தவில பகுதியில் வசிப்பவர்.

இவர் தனது ஒரு உணவகத்தில் தனது காதலியுடன் மதுபானம் அருந்தி விட்டு, முச்சக்கரவண்டியில் கொம்பனித்தெரு  - ஸ்டெபல் வீதியில் அமைந்துள்ள அழகு சாதன நிலையத்திற்கு வந்துள்ளார்.

அந்த வழியாக வந்த இளைஞர்கள் காதலியை கிண்டல் செய்ததாகவும், அதைத் தொடர்ந்து வந்த வாக்குவாதம் மோதலாக அதிகரித்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இளைஞர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியபோது,குறித்த நபரும் அவரது காதலியும் முச்சக்கர வண்டியில் ஏறி அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கொம்பனித்தெரு – முத்தையா பகுதியில் மீண்டும் அவர்களுக்கு இடையில் மற்றுமொரு மோதல் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இதில் அழகு சாதன நிலையத்தின் முகாமையாளர் படுகாயமடைந்து கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

18 முதல் 25 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை  கொப்பனித்தெரு போலீசார் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.