Breaking

Tuesday, August 6, 2019

புகையிரதத்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி!


வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொஹோந்தரமுல்ல பாடசாலைக்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து களுத்துறை – தெற்கு நோக்கி நேற்று (05-08-2019) பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கஹவிடஹேன – மொரன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.