Breaking

Tuesday, August 13, 2019

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் விலை உயரும்!


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை சூத்திரத்தின்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.




இதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒட்டோ டீசலின் விலை திருத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் கீழே.

ஒரு லிட்டர் ஒக்டைன் 92 பெட்ரோல் விலை ரூ .138.


ஒரு லிட்டர் ஒக்டைன் 95 பெட்ரோல் விலை 163 ரூபாய்.


ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை ரூ.134 ரூபாய்.