Breaking

Saturday, August 3, 2019

சற்று முன்னர் யாழில் நடந்த கோர சம்பவம்! இரு இளைஞர்களின் நிலை கவலைக்கிடம்! தப்பிச் சென்ற ஆயுததாரிகள்!

யாழ். கொழும்புத்துறையில் இன்று மதியம் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

படுகாயமடைந்தவர்கள் 25 வயதுக்குட்பட்ட இரு இளைஞர்களே எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில், காயமடைந்தவர்களில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மற்ரொருவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.