Breaking

Thursday, September 12, 2019

பாடசாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென உயிரிழந்த சோகம்!

இலங்கையின் தம்புள்ளையில் உள்ள வீர மோஹான் ஜயமஹா வித்யாலய மாணவர் இன்று (12-9-19) காலை பாடசாலையில் திடீரென உயிரிழந்தார்.

இன்றையதினம் பாடசாலை மைதானத்தில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்த மாணவன்; பாடசாலை பணியாளர்களிள் உதவியுடன் தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குறித்த மாணவனுக்கு பிறப்பிலிருந்து இதய நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

உயிரிழந்தவர் தம்புள்ளை பெல்வெஹெரவில் வசிக்கும் 15 வயது பிரபாத் மதுசங்க என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தம்புள்ளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.