Breaking

Thursday, September 12, 2019

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! பெண் பலி! ஒருவர் படுகாயம்!

இலங்கையின் தலவத்துகொட - கொட்டாவ சாலையில் பொல்வத்த பகுதிக்கு அருகே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொரு நபர் பலத்த காயமடைந்தார். இன்று (12-9-19) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பன்னிப்பிட்டியிலிருந்து தலவத்துகொட நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் ஒன்று  எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன்  மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முச்சக்கர வண்டியின் பயணம் செய்து கொண்டிருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ஹோமாகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவர் பதுளை, ஹிதகொட பகுதியை சேர்ந்த இசானி குணரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹரகம காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.