Breaking

Wednesday, September 18, 2019

உங்களால் உதவ முடியாவிட்டாலும் உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த செய்தியை பகிருங்கள், யாராவது உதவக்கூடும்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் பசி பட்டினியால் வாடும் குடும்பத்திற்க்கு உதவி தேவை!

பிள்ளைகள் இருவரையும் செல்வீச்சில் இழந்து வயதிற்கு வந்த பேரப்பிள்ளைகளுடன் நோய்வாய்ப்பட்ட மருமகனுடன் வாழும் வயோதிப பெண் இன்னும் எம் நாட்டு யுத்த கோரத்தின் சாட்சியாய் எம் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.


தன் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளையும் போரிற்கு பறிகொடுத்து இன்று உதவிக்கு யாருமின்றி தனது பேரப்பிள்ளையை செஞ்சோலை நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அடிப்படைவசதியான மலசலகூடம் கூட இன்றி நோய்வாய்ப்பட்ட மருமகன் மற்றும் வயதிற்கு வந்த பெண்பிள்ளையுடன் பரந்தனில் வாழ்ந்து வருகின்றார் வள்ளியம்மா.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள்94212030600 அல்லது 94757776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு – உங்களால் உதவ முடியாவிட்டாலும் உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த செய்தியை பகிருங்கள், யாராவது உங்களின் மூலம் அவர்கள் குடும்பத்திற்கு உதவ வாய்ப்பு உள்ளது .

இவர் அன்றாடம் வாழ்வில் எதிர்நோக்கும் சொல்லொண்ணா துயரங்களை என் இனமே என் சனமே நிகழ்ச்சியின் ஊடாக உங்கள் பார்வைக்காக



நன்றி – ஐ.பி.சி தமிழிா