Breaking

Wednesday, September 4, 2019

ஏ9 வீதியில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி!


கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று (04-9-19) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.

பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தீபன் என்பவராவார். இவர் கடந்த மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். தற்போது, பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி செயற்பாட்டாளராக இருக்கிறார்.

சம்பவத்தில் சாரதி தவிர்ந்து வேறு எவரும் பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது காரிலும் மஹிந்த ராஜபக்சவின் படம் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.