Breaking

Tuesday, October 1, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் அவசர சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்று வருகினறது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக அறிய கிடைக்கின்றது.

இந்த சந்திப்பிற்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.