Breaking

Tuesday, October 1, 2019

அனைவராலும் போற்றப்பட்ட கண்டி தமிழனுக்கு ஜனாதிபதி நிதியுதவி


கண்டி நகரிலுள்ள தொடர்மாடி கட்டிடத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்றிய நாமநாதன் இராமராஜுக்கு ஜனாதிபதி நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆபரணங்களுக்கு தங்க முலாமிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இராமராஜுக்கு, இந்த விபத்தின் பின்னர் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவரின் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், குடும்பத்தை நடத்தி செல்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 10 லட்சம் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.