Breaking

Saturday, November 30, 2019

பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து! 10 பேர் படுகாயம்!


இலங்கையின் இரத்தினபுரி - பலாங்கொடை பிரதேசத்தின் ஓபநாயக்க பகுதியில் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் லொறியின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவம் தொடர்பான ​ஆரம்பகட்ட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.