Breaking

Friday, November 29, 2019

கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் புத்தளத்தில் சடலமாக மீட்பு: பொலிசார் வெளியிடும் தகவல்!


கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தம்பிராஜா அம்பலவாணர் என்பவரே புத்தளத்தில் புகையிர தண்டவாளங்களிற்கிடையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவர் கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த சமயத்தில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக செய்தி பரவியிருந்தது. எனினும், அது வதந்தியென புத்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டதாக நாட்டின் எந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவாகியிருக்கவில்லையென்றும், சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.