Breaking

Saturday, November 30, 2019

முல்லைத்தீவு - முள்ளியவளையில் கஞ்சாவுடன் இருவர் கைது!


முல்லைத்தீவு - முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம்பெற்றுவருவதாக முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் (29.11.19) நேற்று காலை 03ஆம் கட்டைப்பகுதியில் பேருந்தில் வந்திறங்கிய ஆழியவளையினை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் 1 கிலோ கேரளா கஞ்சாவினை 4 பொதிகளில் வியாபாரத்திற்காக கொண்டுவந்துள்ளார்கள்.

சந்தேகத்தின் பேரில் இவர்களை பிடித்து விசாரித்த போது கஞ்சா வியாபாரத்திற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இவர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்த கேரளா கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு ஆழியவளையினை சேர்ந்த 28 அகவையுடைய பெண் ஒருவரும் 39 அகவையுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஆழியவளையில் இருந்து பேருந்தில் கஞ்சா வியாபாரத்திற்காக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் முள்ளியளை பொலீசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.