Breaking

Sunday, December 1, 2019

முல்லைத்தீவில் கனமழை ,வட்டுவாகல் பாலத்தை மேவி பாயும் வெள்ளம் , ஆபத்தில் போக்குவரத்து !


முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் குளங்கள் ஆறுகள் களப்புகள் என்பன நிறைந்து வழியும் நிலையில் காணப்படுகின்றது . இதனால் நந்திக்கடலில் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் வழிந்து பாய்கின்றது .

இதனால் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து அபாயம்மிக்கதாக மாறியுள்ளது . இன்றையதினம் அதிகாலை முதல் குறித்த பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து பாய்கின்றது . இதனால் வீதி `தெரியாத நிலை காணப்படுகின்றது . மிகவும் `ஒடுங்கிய `பகுதியாக `வட்டுவாகல் பாலம்  காணப்படுகின்ற நிலையில் நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து பாய்வதால் விபத்துகள் பல இன்றையதினம் இடம்பெற்றுள்ளது .

நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் பாலம் முழுமையாக சில இடங்களில் மூடியுள்ளது . பல இடங்களில் பாலமும்  சேதமடைந்துள்ளது .   ஒவ்வொரு மாரிகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுகின்றது .