Breaking

Thursday, December 5, 2019

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவன்! காங்கேசன்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம் !


யாழ்ப்பாணத்திற்கு காங்கேசன்துறை கடற்பகுதியில் நீராடிய தென்பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 மாத்தறை – தெனியாய பிரதேசத்தை சேர்ந்த செல்வநாயகம் அலெக்சென்டர் (21-வயது) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் தெனியாய பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.