Breaking

Tuesday, January 28, 2020

முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2020!


முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (28-01-2020) பிற்பகல் 01.30 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.ம.கமலகாந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாணவியும் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திருமதி.மங்களேஸ்வரி பாஸ்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவிக்கல்விப் பணிப்பாளர் (வலயக்கல்வித் திணைக்களம் முல்லைத்தீவு) திரு.த.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மற்றும் கௌரவ விருந்தினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், கிராமசேவையாளர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.