Breaking

Sunday, April 5, 2020

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை!


இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொவிட் -19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 கொவிட் -19 வைரஸினால் பாதிக்கப்படுவோர் அதிகரித்தாலும் அதற்கு இணையாக நாள்தோறும் கொவிட் -19 வைரஸிலிருந்து பரிபூர்ணமாக குணமடைந்தும் வெளியேறிச்செல்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையிலேயே தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறியோர் மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானோர் மீண்டும் 14 நாட்கள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.