இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2769 ஆக உயர்ந்துள்ளது.

பெலாரஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பி நால்வரும் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 655 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 9 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், 2103 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.