சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மரணம்..!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நபர் அண்மையில் ஏற்பட்ட சுகயீன நிலைமை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் கொள்ளை சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.