கொரோனாவினால் இலங்கையர்களுக்கு ஆபத்து! தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் முக்கிய எச்சரிக்கை..!!

தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் அறிவுறுத்தல்!

இலங்கையில் இன்னமும் கொரோனா தொற்று ஆபத்து நீங்கவில்லை என இலங்கையின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் என்று சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குள் இனங் காணப்பட்டுள்ளமையினால் நாட்டில்  வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.