உலக சந்தையில் 9 வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலையில் பாரிய உயர்வு..!

தங்கத்தின் விலையில் பாரிய உயர்வு..!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு உயர்வடைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் தடவையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய உயர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வார இறுதியில் 1900 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்ற வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய தங்க கொள்வனவாளர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் தங்க கொள்வனவு நூற்றுக்கு 30 வீதம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.