வெளிநாட்டில் வசிக்கும்  இலங்கையர்களின் வங்கிக் கணக்கில் கொள்ளை..!!

இலங்கையர்களின் வங்கிக் கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல் கைது!

தற்போது  சிலரின் வங்கி கணக்குகளில் இருந்து பெருமளவான பணம் காணமல் போகின்றதாக பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களின் இலங்கை வங்கி கணக்கில் மோசடியான முறையில் பெருமளவான பணத்தை  இணைய வழியாக கொள்ளையடிக்கும்  மற்றும் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்கும் மோசடி தொடர்பில் 5 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தில் வைத்தே இந்த  ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் வெளிநாட்டில் உள்ள பணியாளர்களுக்கு சிறிய வட்டியின் கீழ் கடன் கொடுப்பதாக பொய்யான தகவல்களை வழங்கி, அவர்களின் வங்கி கணக்குகளின் தகவல் பெற்று பெறுமளவான பணம் திருடப்பட்டுள்ளது.இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பண மோசடி தொடர்பில் பெண் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரம், அவற்றினை அச்சிடுவதற்கான பொருட்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.