இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு..! தற்போதைய நிலை என்ன?

இலங்கையில் மேலும்  தீவிரமடையும் கொரோனா!

நாட்டில் இரண்டாவது கட்டமாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.அந்த வகையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்று மேலும் உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களில் மேலும் 3 பேர், மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 4 பேர் என 12 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அஅறிவித்துள்ளது.

அதற்கமைய நாாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2106 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 665 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.