வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில்  ஒருவர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் பலி!

வவுனியா – பறண்நட்டகல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து சம்பவம்  ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.