யாழ்.மக்களுக்கு சுகாதார திணைக்களத்தால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

யாழ்.மக்களுக்கு  விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

யாழ் பகுதியில் கருங்குளவிக் கூடுகள் மரங்களில் இருப்பதைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார திணைக்களத்துடன் அல்லது கிராம அலுவலர் பிரிவு, பொதுச் சுகாதார பரிசோதகர், போன்றோருடன் தொடர்பு கொண்டு  அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் கூடுகளை அழித்து, குளவிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என சாவகச்சேரி சுகாதார திணைக்களத்தினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அண்மையில் மீசாலை பகுதியில்  பனை மரத்தில் இருந்து விழுந்த ஓலைக்குள் இருந்த கருங்குளவியின் தாக்குதலில் சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

இதே போன்று மத்திய மலை நாட்டிலும் குளவித்தாக்குதலுக்கு மக்கள் தொடர்ந்தும் உள்ளாகுவதுடன். அங்கு இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.