ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறியுள்ள ராஜபக்ச குடும்பம்…

ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறியுள்ள ராஜபக்ச குடும்பம்…

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் பணக்கார குடும்பமாக மாறியுள்ளதாக சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூபா 65 லட்சம் என்று முன்னாள் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.

நேற்றைய தினம் (27) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, கட்டும் ஹூப்லாட் கடிகாரத்தின் மதிப்பு ரூ .65 லட்சம், பனேராய் கடிகாரம் ரூ .54 லட்சம் மதிப்புடையது, அவரிடம் 30 க்கும் மேற்பட்ட கடிகாரங்கள் உள்ளன.

“இந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? இன்று ராஜபக்ச குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறியுள்ளது. நாமல் ராஜபக்ஷ கொழும்பு 07 பென்ட்ஹவுஸில் இருக்கிறார்.அதன் பெறுமதி 3000 லட்சத்துக்கு மேல். அடுத்த மகனும் அவ்வாறே இருக்கிறார், அடுத்த மகனும் அப்படித்தான்” என்று அவர் தெரிவித்தார்.