இலங்கையில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்..!

தேர்தல் பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்..!

இலங்கையில் எதிர் வரும் தேர்தல் கடமைகளில் ஈடுடவுள்ள ஆசிரியர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தெரிவித்துள்ளார்.

27 ஆம் திகதி (இன்று) முதல் 11ம் 12ம் 13ம் தரங்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்த வகுப்புக்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு செல்வர். வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர்.

அரச துறையில் பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் பெண்களாவர். தேர்தல் கடமைகளில் ஈடுடவுள்ள ஆசிரியர்களுக்கு இந்த முறை அவர்களின் வீடுகளுக்கு ஒரு கடிதமும், பாடசாலைக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

இதற்கமைய ஆசியர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது. 27 ஆம் திகதியின் பின்னர் பாடசாலைகளுக்கு கிடைக்கும் கடிதங்களை 31ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரரோ ஆசிரியர்களுக்கு கையளிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு வின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.