யாழ்.வடமராச்சி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

வடமராச்சி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்பகுதியில்  மீன்பிடிப்படகு ஒன்று கவிழ்ந்ததில் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போனவரை ஏனைய மீனர்களின் உதவியுடன் தேடும் பணியில் கடற்படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை படகு ஒன்றில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றினால், படகு கவிழ்ந்து கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஒருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் காணாமல்போன மற்றைய மீனவரை தேடும் பணிகள்  தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.