பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதியை நெகிழ வைத்த இரண்டு சிறுவர்கள்..!

கோட்டாபய ராஜபக்ஷவை நெகிழ வைத்த இரண்டு சிறுவர்கள்..!

பிரச்சார கூட்டத்திற்கு சென்ற  போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.

இதன் போது சிறுவர் ஒருவர் ஜனாதிபதியை ஓவியமாக வரைந்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

அவ் ஓவியத்தினை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அந்த சிறுவனுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து , ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது, அங்கு இஸ்லாமிய சிறுமி ஒருவர் ஜனாதிபதியை ஓவியமாக வரைந்து படத்தை கையளித்துள்ளார்.

அதனையும்  மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த சிறுமியுடனும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும் சிறுவர்கள் வரைந்து கொடுத்த ஓவியங்களையும் ஜனாதிபதி தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது