ஆட்பதிவு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட விசேட  அறிவித்தல்!

ஆட்பதிவு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட விசேட  அறிவித்தல்!

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

கடந்த 17ஆம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் வரை கிடைத்த விண்ணப்பங்களுக்காக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரின் கையெழுத்துடன் தற்காலிக அடையாள பத்திரம் வழங்கப்படும் என ஆணையாளர் வியானி குணதிலக்க அறிவித்துள்ளார்.

இதற்கமைய 30 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுக்காக தற்காலிக அடையாள பத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த தற்காலிக அடையாள பத்திரங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கிருந்து மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம சேகவர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் அதனை உரிய நபர்களிடம் கையளிப்பார்கள் எனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.