தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை..!

தனியார் ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை..!

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்கமைய கொரோனா காலத்தில் பணிக்கு வருபவர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கும் வழமையை போன்று அவர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 14500 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாதென  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டெம்பர் மாதம் வரை எந்தவொரு பணிகளிலும் ஈடுபடாமல் வீடுகளில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு மாத்திரமே 14500 ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.