விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு குசல் மென்டிஸ் வழங்கிய உதவி..!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு குசல் மென்டிஸ் வழங்கிய உதவி..!

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் ச வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை கவனிக்காமல் விட்டால் அது பிழையான எடுத்துக்காட்டாக அமைந்து விடும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தங்களுகு்கமைய இவ்வாறான சம்பவத்தில் ஒழுக்காற்று பரிசோதனை நடத்துவதற்காக அதிகாரம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உள்ளது.

அண்மையில் பாணந்துறையில் குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு 64 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் வழங்கியுள்ளார். கடந்த 6ஆம் திகதி நீதிமன்றத்தில் வைத்து அவர் இந்த பணத்தை வழங்கியுள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் இறுதி கிரியை செலவினத்திற்காக 95 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி பரப்பையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கு குசல் மென்டிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.என்று தெரிவிக்கப்படுகின்றது.